Home இந்தியா ராமர் பாலத்திற்குச் சேதாரமின்றி சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு!

ராமர் பாலத்திற்குச் சேதாரமின்றி சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு!

528
0
SHARE
Ad

sethu-plam-series-550-2புதுடில்லி – ராமர் பாலத்திற்கு எந்தச்சேதமும் இல்லாமல் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாய் அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவைப் பொருத்து, இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மாற்றுப்பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து, 6 பரிந்துரைகளை நிபுணர்கள் குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசாங்கத்தில் வலுவான இடத்தைப் பிடித்திருந்த திமுக, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவைக் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்பாகச்செயல்பட்டது.

ஆனால், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ராமர் பாலம் பாதிக்கப்படும் எனக் கூறி, இத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அத்திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்நிலையில், ராமர் பாலத்திற்குப் பாதிப்பு இல்லாமல் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் எனக் கட்காரி தெரிவித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.