Home Featured நாடு ஹஜ் பெருநாள்: 593 பசுக்களை அன்பளிப்பாக வழங்கிய நஜிப்

ஹஜ் பெருநாள்: 593 பசுக்களை அன்பளிப்பாக வழங்கிய நஜிப்

565
0
SHARE
Ad

Najib Tun Razakபெக்கான்- ஹஜ் பெருநாளையொட்டி பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் 593 பசுக்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பெக்கான் மாவட்டத்தில் உள்ள மசூதிகள், அரசு முகைமையகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு இந்தப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் பிரதமர் சார்பாக அம்னோ பெக்கான் தொகுதி துணைத் தலைவர் டத்தோ அபுபாக்கர் ஹாருண் பங்கேற்றார். மாநிலத்தில் உள்ள 14 அம்னோ தொகுதிகளும் தலா 4 பசுக்களைப் பெற்றன.

பிரதமர் நஜிப் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் உள்ள 59 மசூதிகள், 158 தொழுகை நிலையங்கள் (சுராவ்) ஆகியவற்றுக்கும் பசுக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்தப் பசுக்கள் அனைத்தும் பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் நஜிப்புக்கு நன்கொடையாக வழங்கியவையாகும்.