சென்னை, ஜூன் 25 – கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவுடனேயே ஜெயலலிதா பதவி விலகியிருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அதிமுக செயலாளர் போன்று நடந்து கொள்கிறார். ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது நூறு சதவீத விதிமீறல்கள் நடந்துள்ளன”
“பிரதமர் மோடி யோகா மூலம் இந்துத்துவா கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயன்று வருகிறார். 2016-ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று தமிழகக் காங்கிரஸ் குழு முடிவு செய்துள்ளது”.
“சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த உடனேயே அவர் பதவி விலகியிருக்க வேண்டும்” என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.