Home இந்தியா ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல்  ஜெயலலிதாவால் திணிக்கப்பட்ட தேர்தல் – விஜயகாந்த்!

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல்  ஜெயலலிதாவால் திணிக்கப்பட்ட தேர்தல் – விஜயகாந்த்!

453
0
SHARE
Ad

vijaykanthசென்னை, ஜூன் 25- ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்துத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் சதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் எனத் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் திணிப்பிற்குத் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே முழு முதற்காரணமாவார் என அத்தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் 4,992 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூடுதல் மின்சாரத்திற்காக 2011-ல் இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எந்தத் திட்டங்களைத் துவக்கி, அதன் மூலம் இந்தக் கூடுதல் மின்சாரத்தைப் பெற்றார் என்பதைத் தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கமுடியுமா?

சென்னையைத் தாண்டினால் அனைத்து இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.  கடந்த 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மின்திட்டம் கூட செயல்பாட்டிற்கு வரவில்லை.

2011-ல் அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தபின் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மின்திட்டம் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவைகள் எந்த நிலையில் இருக்கிறதென்றே தெரியவில்லை என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.