Home நாடு சிறுநீர் சர்ச்சை: ஆரம்பப் பள்ளி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சிறுநீர் சர்ச்சை: ஆரம்பப் பள்ளி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

527
0
SHARE
Ad

unnamed (1)கோலாலம்பூர், ஜூன் 25 – இஸ்லாம் அல்லாத மாணவர்களை சிறுநீர் அருந்துமாறு வேடிக்கையாக ஆசிரியர் ஒருவர் கூறிய பள்ளி மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கெடா மாநிலத்தில் சுங்கைப் பட்டாணியில் உள்ள அந்த ஆரம்பப்பள்ளியில் நேற்று இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றாலும், காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதனிடையே, இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கெடா குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமைத் துணை ஆணையர் முகமட் நசிர் யா தெரிவித்துள்ளார்.