Home நாடு விபத்துகள் அதிகரிப்பு; சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுங்கள் – ஓப்ஸ் செலாமட் எச்சரிக்கை

விபத்துகள் அதிகரிப்பு; சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுங்கள் – ஓப்ஸ் செலாமட் எச்சரிக்கை

573
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர், ஜூலை 16 – நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊருக்கு அதிக பேர் பயணம் செய்யும் ஏற்படும் விபத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஓப்ஸ் செலாமட் (Operation Selamat) தொடங்கப்பட்டது.

என்றாலும், இதுவரை 7274 சாலை விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாகவும், 116 பேர் பலியானதாகவும் தெரிய வந்துள்ளது.

கூட்டரசு சாலைகளில் நிகழ்ந்த விபத்துக்களில் 47 பேரும், மாநில சாலைகளில் 26 பேரும், நெடுஞ்சாலைகளில் 18 பேரும் பலியானதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் 12 பேர் நகராட்சிகளுக்கு உட்பட்ட சாலைகளில் நிகழ்ந்த விபத்துக்களில் பலியாகியுள்ளனர்.

மிக அதிகபட்சமாக ஜொகூரில் 20 பேரும், சிலாங்கூரில் 17 பேரும் இறந்திருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் காலிட் அபு பக்கர் தெரிவித்தார்.
விபத்தில் இறந்தவர்களில் இருசக்கர வாகனமோட்டிகளும், அவர்களின் பின்னே அமர்ந்து செல்பவர்களும்தான் அதிகம் என்று குறிப்பிட்ட அவர், மொத்த விபத்துக்களில் சுமார் 59 விழுக்காட்டினர் இருசக்கர வாகனமோட்டிகள்தான் என்றார்.

“கடந்தாண்டு இக்காலகட்டத்தில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும், இந்தாண்டு விபத்துக்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவசரகால பாதையை தவறாகப் பயன்படுத்தியதன் பேரில் 301 சம்மன்கள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் இருசக்கர வாகனமோட்டிகள் சாலை விதிகளை மீறியதன் பேரில் 1880 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன,” என்றார் காலிட் அபு பக்கர்.