இந்தத் தேர்தலில்.முன்னாள் அதிபர் ராஜபக்சேயும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதால் இலங்கைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இத்தேர்தலுக்குப் பார்வையாளர்களை அனுப்புமாறு இலங்கை அரசு அழைப்பு விடுத்ததால், ஐரோப்பிய ஒன்றியம் தனது தேர்தல் பார்வையாளர் குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது.
ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் திட்டப்படி, இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 18 நீண்ட காலப் பார்வையாளர்கள் நிறுத்தப்படுவர். மேலும் 28 குறுகிய கால மேற்பார்வையாளர்களும், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பிருந்து பணியைத் தொடங்குவர்.
இந்தக் குழுவினருக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் பிரடா தலைமை தாங்குவார்.
இந்தத் தேர்தல் மேற்பார்வைக் குழுவினர் இலங்கை மற்றும் அனைத்துலகச் சட்டப்படி தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அரசியல் கட்சியினரின் பிரசார நடவடிக்கைகள், ஊடகங்களின் தலையீடு, வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் அறிவித்தல், தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்கள் போன்றவற்றை இந்தக் குழு கண்காணிக்கும்.
இலங்கையில் ஜனநாயக நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை இதுவாகும்.