Home கலை உலகம் ‘இனிமே இப்படித்தான்’ படமும் பாக்யராஜ் படத்தின் நகல்தான்!

‘இனிமே இப்படித்தான்’ படமும் பாக்யராஜ் படத்தின் நகல்தான்!

736
0
SHARE
Ad

????????????????????????????????????????????????சென்னை,ஜூன்25- சந்தானமும், இராம.நாராயணனும் இணைந்து தயாரித்த ‘ கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படம் பாக்யராஜின் ‘நேற்று இன்று நாளை’ படத்தின் அப்பட்டமான நகல் என்கிற சர்ச்சை எழுந்து, பின் பாக்யராஜுடன் சமரசம் பேசிப் பிரச்சனை ஒரு தீர்வுக்குக் கொண்டு வரப்பட்டது.

அதே சர்ச்சை  சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கும் எழுந்துள்ளது. இந்தப் படமும் பாக்யராஜின் ‘சின்னவீடு’ மற்றும் ‘பாமா ருக்மணி’ படத்தின் தழுவல் எனச் சமூக வலைதளங்களில் விமர்சனம் வந்துள்ளதால், கடுங்கோபத்தில் இருக்கிறார் சந்தானம்.

மறுபடியும் பிரச்சனையாகி, பாக்யராஜிற்குப் பங்குப் பணம்( royalty) தர வேண்டி வந்துவிடுமோ என்ற பயம் இருக்கத்தானே செய்யும்?

#TamilSchoolmychoice