ஜெய்ப்பூர், ஜூன் 26- ஏர் அரேபியா விமானம் ஒன்று நேற்று காலை 165 பயணிகளுடன் ஜெய்ப்பூரில் இருந்து ஷார்ஜாவிற்குப் புறப்பட்டது.
விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று பறவை ஒன்று விமானத்தை உரசியதால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
உடனே, விமானம் மீண்டும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் இருந்த கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பிற்பகலில் விமானம் சார்ஜாவிற்குக் கிளம்பிச் சென்றது.
“இது ஒரு சிறிய தொழில் நுட்பக் கோளாறுதான்; பயப்பட ஒன்றும் இல்லை. 165 பயணிகளும் பத்திரமாக உள்ளனர்” என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.