Home கலை உலகம் அப்பாவின் ஆசீர்வாதத்தோடு காதலிக்கும் அர்னால்டு மகன்!

அப்பாவின் ஆசீர்வாதத்தோடு காதலிக்கும் அர்னால்டு மகன்!

620
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 26- ஹாலிவுட்டின் பிரபல அதிரடி நடிகர், கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநர், தன் உடல் கட்டமைப்பால் உலகம் முழுவதும் உள்ள இரசிகர்களைக் கவர்ந்தவர் அர்னால்டு ஸ்வாசனேகர். இவரது மகன் பாட்ரிக். வயது 21.

arபாட்ரிக், பிரபல கவர்ச்சி நடிகையான மைலி சைரஸைக்( வயது 23) கடந்த சில மாதங்களாக விரட்டி விரட்டிக் காதலித்துக் கொண்டிருக்கிறார்.

miley-cyrus-2இவர்களது காதல் புகைப்படங்கள் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால், அர்னால்டு அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

“என் குழந்தைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என நன்றாகத் தெரியும். அவர்களின் செயல்பாடுகள் எனக்கு எப்போதும் பதற்றத்தை ஏற்படுத்தியதில்லை.

பாட்ரிக் விவரம் தெரிந்தவன். அவன் செய்யும் செயல்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை எற்படுத்தும் என்பதை அவனுக்கு உணர்ந்து கொள்ளத் தெரியும்.

மேலும், மைலி சரஸ் அருமையான பொண்ணு. அவளைச் சமீபத்தில் சந்தித்துப் பேசினேன்.வாழ்க காதலர்கள்!” என அவருக்கே உரிய பாணியில்  கூறியுள்ளார்.

பக்குவமான அப்பா அர்னால்டு! பார்த்து நடந்து கொள்ளுங்கள் பாட்ரிக்!