Home இந்தியா 5 ஆவது சுற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: ஜெ-49000; கம்யூனிஸ்டு- 3713!

5 ஆவது சுற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: ஜெ-49000; கம்யூனிஸ்டு- 3713!

511
0
SHARE
Ad

New-CM_Jaya7(C)சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 5-ஆவது சுற்று நிலவரப்படி, முதல்வர் ஜெயலலிதா 49000 வாக்குகள் பெற்றுத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி,மகேந்திரன் 3713 வாக்குகள் பெற்றுப் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் முன் கூடியுள்ள அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

#TamilSchoolmychoice

அம்மா அமோக வெற்றி என்று குதூகலமாகக் கூக்குரலிடுகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியும் ஜெயலலிதாவின் வெற்றிக் களிப்பில் களைகட்டியுள்ளது.