பீஜிங், மார்ச்.8- சீனாவில் உலகிலேயே உயரமான புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள புத்தர் சிலைகளில் பலவகைகள் உள்ளன. அவற்றுள், “அமிதாப புத்தர்” என்ற வகை சிலையும் ஒன்று.
புத்தமத பிரிவான வஜ்ராயன பவுத்தத்தின் ஐந்து புத்தர்களில், அமிதாப புத்தர் ஒருவர் என கருதப்படுகிறது.
சீனாவின் ஜியாங்ஷியில் உள்ள டோங்ளின் கோவிலில் உலகிலேயே உயரமான அமிதாப புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 800 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலை 48 மீட்டர் உயரம் கொண்டது.
பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.