Home தொழில் நுட்பம் உடல் பருமனை கண்முன்னே காட்டும் மெய் நிகர் தொழில்நுட்பம்!

உடல் பருமனை கண்முன்னே காட்டும் மெய் நிகர் தொழில்நுட்பம்!

540
0
SHARE
Ad

virtual Reality3கோலாலம்பூர், ஜூன் 30 – உடல் பருமன் என்பது உடனே ஏற்படக் கூடிய மாற்றம் அல்ல. படிப்படியாக நமது உடலில் சேரும் கொழுப்புகள் உடல் ரீதியாக பெரும் மாற்றங்களுக்கு வித்திடும். இந்த மாற்றங்கள் ஒரு எல்லைக்கு மேல் தாண்டும் போது தான் பிரச்சனை உருவாகிறது. இதனை தடுக்க மருத்துவ ரீதியாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும், உடனுக்குடன் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிவிப்பதற்கு தொழில்நுட்ப கருவிகளோ, பயன்பாடுகளோ உருவாக்கப்படவில்லை. இந்நிலையில்,  ஜார்ஜியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ‘மெய் நிகர்’ (Virtual Reality) தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

இந்த செயலியை நாம் ‘கூகுள் கார்போர்ட்’ (Google Cardboard)  உதவியுடன் பயன்படுத்த முடியும். இதன் மூலம் 2 வருடங்களில் நம் உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்களை 2 நிமிடங்களில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

virtual Reality2உதாரணமாக, அதிக கலோரி உள்ள குளிர்பானத்தை நாம் பருகும் போது அந்த சமயத்தில் எவ்வளவு கொழுப்பு சேர்கிறது, இது தொடர்ந்தால் அடுத்த சில மாதங்களில் எத்தகைய உடலியல் மாற்றங்கள் ஏற்படும் போன்றவற்றை இந்த செயலி நேரடியாக நமக்கு காண்பித்துவிடும். இந்த செயலியின் சிறப்பே அதன் துல்லியம் தான். இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை  ஜார்ஜியா பல்கலைக் கழகம் கடந்த சில மாதங்களாகவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

virtual Realityஇது தொடர்பாக ஜார்ஜியா பல்கலைக் கழகத்தின் துணை பேராசிரியர் கிரேஸ் ஆன் கூறுகையில், “காணொளிகள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் மட்டுமே இதுவரை உடல் பருமன் குறித்த விழிப்பு உணர்வுகளை நாம் பார்த்து வந்தோம். ஆனால் நம் உடலில் எந்த அளவிற்கு கொழுப்பு சேர்ந்துள்ளது என்பதை நாமே அறிந்து கொண்டால், உடல் பருமன் தொடர்பாக சிறந்த விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சி தான் இந்த மெய் நிகர் தொழில்நுட்பத்தின் உருவாக்கம். இதன் மூலம் நமது மூளை நேரடியாக உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொள்ளும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த செயலியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நெக்ஸ்ட் கேலக்ஸி கார்ப் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.