Home Featured கலையுலகம் உடல் பருமனைக் குறைப்போம் – மோடி, சல்மான் கான் அறிவுரை

உடல் பருமனைக் குறைப்போம் – மோடி, சல்மான் கான் அறிவுரை

834
0
SHARE
Ad

salman-khan-anti-obesity-day

மும்பை – முறுக்கேறிய கட்டுமஸ்தான உடலோடும், சிக்ஸ் பேக் எனப்படும் தொப்பையில்லாத வயிற்றுத் தசைகளுடனும், 50 வயதிலும் கட்டழகனாக இந்திப் படவுலகில் வலம் வருபவர் சல்மான் கான்.

உடல் பருமனுக்கு எதிரான இயக்கம் இந்தியாவில் தற்போது நடத்தப்பட்டு வரும் வேளையில் தொப்பையில்லாமல் வலம் வருவோம், உடல் பருமனைக் குறைப்போம் என்ற அறிவுரையோடு, தொப்பையில்லாத தனது வெற்றுடம்பு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சல்மான் கான்.

#TamilSchoolmychoice

நரேந்திர மோடியின் அறிவுரை

இந்தியப் பிரதமர் மோடியும், உடல் பருமன் நமது உடல் நலத்துக்கு மட்டும் கேடு விளைவிப்பதல்ல, மாறாக நமது பொருளாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும். கடுமையான உடற்பயிற்சிகள் செய்து கட்டான உடலோடும், திடகாத்திரத்தோடும், திகழ்ந்து நாட்டையும் வலிமையானதாக ஆக்குவோம் என்று கூறியுள்ளார்.