Home Featured நாடு ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமையா? பொய்ச் செய்தி என துணையமைச்சர் மறுப்பு!

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமையா? பொய்ச் செய்தி என துணையமைச்சர் மறுப்பு!

598
0
SHARE
Ad

Zakir Naik

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றுள்ளார் என இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என உள்துறை துணையமைச்சர் நூர் ஜாஸ்லான் முகமட் தெரிவித்துள்ளார்.

அயல் நாட்டவர்கள் மலேசியக் குடியுரிமை பெறுவது நீண்ட காலம் எடுக்கும் ஒரு நடைமுறை என வர்ணித்த அவர், ஜாகிர் நாயக் குறித்த செய்தி வெறும் குற்றச்சாட்டு போன்ற அனுமானம்தான் என்றும் கூறியதாக, இணைய செய்தித் தளமான பிரி மலேசியா டுடே தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மலேசியக் குடியுரிமை பெறுவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்றும், பல நடைமுறைகளைத் தாண்டிவர வேண்டும் என்றும் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூர் ஜாஸ்லான் கூறியிருக்கின்றார்.

Najib-Zakir Nayak-meeting-feature

பிரதமர் நஜிப்புடன் ஜாகிர் நாயக் (கோப்புப் படம்) 

zakir-naik-with-zahid-hamidi

துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சாஹிட் ஹாமிடியுடன் ஜாகிர் நாயக்…

ஜாகிர் நாயக் நடத்தி வந்த இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியம் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளதோடு, இந்தியக் காவல் துறையினராலும், இந்தியப் புலனாய்வுத் துறையினராலும் ஜாகிர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜாகிர் நாயக் பலமுறை மலேசியா வந்து மலேசியத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியிருப்பதோடு, இஸ்லாமிய பிரச்சார உரைகளையும் நிகழ்த்தியிருக்கின்றார்.

அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகின்றார் என்றும் மற்ற மதங்களை அவமதிக்கின்றார் என்றும் கூறி முஸ்லீம் அல்லாத பல மத அமைப்புகள் அவரது மலேசிய உரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.

கடந்த பல மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடியுரிமை பெற்ற ஜாகிர் நாயக், இதுவரை இந்தியா திரும்பவில்லை.

இவர் மலேசியாவில் இருக்கின்றாரா என்ற தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.