Home Featured நாடு நஜிப் பதவி விலக வேண்டும் – தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு தீர்மானம்!

நஜிப் பதவி விலக வேண்டும் – தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு தீர்மானம்!

843
0
SHARE
Ad

Najib 1MDBதம்பின், ஆகஸ்ட் 17 – பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

கம்போங் உலு லாடாங் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அஸ்மான் அப்துல்லா (வயது 42) தலைமையில் இந்த அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானம் நிறைவேற்றும் பொழுது சுமார் 200-க்கும் மேற்பட்ட பேராளர்கள் இருந்ததாக’சினார் ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு அவரது நேர்மை தற்போது கேள்விக்குறியாகி இருப்பதால், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அஸ்மான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice