Home உலகம் போப் ஆண்டவர் தேர்வு கார்டினல்கள் சபை இன்று கூடுகிறது

போப் ஆண்டவர் தேர்வு கார்டினல்கள் சபை இன்று கூடுகிறது

873
0
SHARE
Ad

வாடிகன்,மார்ச்.12- புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்கள் சபை கூட்டம், வாடிகனில் இன்று பிற்பகல் துவங்குகிறது.  உலகம் முழுவதும் உள்ள 120 கோடி கத்தோலிக்க மக்களின் தலைவராக விளங்குபவர் போப் ஆண்டவர். போப் பெனடிக் பதவி விலகியதை தொடர் ந்து, புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்கள் சபை கூட்டம் இன்று துவங்குகிறது. உலகம் முழுவதும் 209 கார்டினல்கள் உள்ளனர். ஆனால், இவர்களில் 80 வயதுக்கு உட்பட்ட 115 பேர் மட்டுமே, போப் ஆண்டவர் தேர்வில் வாக்கெடுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கெடுப்பில் 3ல் 2 பங்கு வாக்குகள் பெறுபவர் போப் ஆக தேர்வு செய்யப்படுவார். யாருக்கும் அந்த அளவு வாக்குகள் கிடைக்காவிட்டால், பல முறை வாக்கெடுப்புகள் நடக்கும். ஒவ்வொரு முறையும் வாக்கெடுப்புக்கு பின்னர் வாக்குச்சீட்டுகள் தீயிலிட்டு அழிக்கப்படும். இதிலிருந்து வெளியாகும் கரும்புகை புகைபோக்கி வழியாக வெளியேறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டு விட்டால் வாக்குச்சீட்டு காகிதங்களுடன் சில ரசாயனங்களும் சேர்த்து தீயில் எரிக்கப்படும். அந்த புகை வெண்மையாக வெளிப் படும். இதன்மூலம், வெளியில் இருப்பவர்கள் போப் தேர்வானதை அறிந்து, கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.