Home இந்தியா நடிகை கஸ்தூரி பிணையில் விடுதலை!

நடிகை கஸ்தூரி பிணையில் விடுதலை!

678
0
SHARE
Ad

சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) ஆந்திராவில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி, இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழ் நாட்டின் பிரபல நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி அண்மையில் தெலுங்கு சமூகத்தினரைப் பற்றித் தரக் குறைவாகப் பேசியதற்காக அவர்மீது காவல் துறையில் பல புகார்கள் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய தமிழ்நாடு காவல் துறையினர் முற்பட்ட வேளையில் அவர் தலைமறைவானதாக ஊடகங்கள் பரபரப்புச் செய்திகள் வெளியிட்டன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) கஸ்தூரி ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். எனினும் “நான் ஓடவும் இல்லை. ஒளியவும் இல்லை. ஆந்திராவில் படப்பிடிப்பில்தான் இருந்தேன். தற்போது சென்னை எக்மோர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறேன்” என கஸ்தூரி தான் வெளியிட்ட காணொலியில் குறிப்பிட்டார்.

சுமுகமான முறையிலேயே காவல் துறையினர் தன்னைக் கைது செய்தனர் – நடத்தினர் – என்றும் கஸ்தூரி அந்தக் காணொலியில் தெரிவித்தார்.

பிராமணர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என்றும் கஸ்தூரி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதற்கிடையில் கஸ்தூரிக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்திருக்கிறார். கைது செய்யும் அளவுக்கு அவர் என்ன தப்பாகப் பேசினார் என சீமான் கூறியிருக்கிறார். கஸ்தூரிக்கு மேலும் பல தரப்புகளும் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கின்றன.