
ஈப்போ: கடந்த வியாழக்கிழமை நவம்பர் 21-ஆம் தேதி தனது 76-வது வயதில் கவிஞர் கோ.முனியாண்டி காலமானார்.
சிறந்த கவிஞராகவும், பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ் இயக்கங்களுக்கும், மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் பங்காற்றியவராவார். சித்தியவான் வட்டாரத்தின் தமிழ் இலக்கிய முகமாக வலம் வந்தவர்.
கோ.முனியாண்டியின் நல்லுடலுக்கு கீழ்க்காணும் அவரின் இல்ல முகவரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் நண்பர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தலாம் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை திங்கட்கிழமை (நவம்பர் 25) காலை 9.00 மணி முதல் அவரின் இல்லத்தில் நடைபெறும்.
கோ.முனியாண்டி இல்ல முகவரி: எண்: 17, கம்போங் அம்பிகா, 32400 ஆயர்தாவார், சித்தியவான், பேராக்.
தொடர்புக்கு: 011-160785726; 012-4606313; 0125580207