Home Featured நாடு ஊழலுக்கு எதிரான மாநாட்டில் பேசுவதில் இருந்து நஜிப் விலகிக் கொண்டார்!

ஊழலுக்கு எதிரான மாநாட்டில் பேசுவதில் இருந்து நஜிப் விலகிக் கொண்டார்!

768
0
SHARE
Ad

najibகோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் பணம் தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது தொடர்பில் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் பிரதமர் நஜிப்புக்கு எதிர்பாராத மற்றொரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருந்தது.

அடுத்தவாரம், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஊழலுக்கு எதிரான அனைத்துலக மாநாட்டில் திறப்புரை ஆற்ற நஜிப் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், இன்று உலகளாவிய நிலையில் அவருக்கு எதிரான ஊழல் புகார் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் அவர் எவ்வாறு ஊழலுக்கான தடுப்பு மாநாட்டில் திறப்பு உரை ஆற்றுவார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது.

அந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கும் விதமாக, அந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து ஒதுங்கிக் கொள்ள நஜிப் முடிவு செய்திருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

ஏறத்தாழ 2,000 பேராளர்கள் கலந்து கொள்ளவிருக்கும் அந்த அனைத்துலக மாநாட்டில் பேசுவதற்கான அழைப்பை முன்பு ஏற்றுக் கொண்டிருந்த நஜிப் தற்போது அந்த அழைப்பை சத்தமில்லாமல் நிராகரித்துவிட்டார் என்று டெய்லி டெலிகிராப் என்ற அந்தப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இந்த அனைத்துலக மாநாட்டை மலேசியா ஏற்று நடத்துகின்றது. நஜிப்புக்குப் பதிலாக மற்றொரு கீழ்நிலை அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டு அந்த மாநாட்டில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரான்பரன்சி இண்டர்நேஷனல் எனப்படும் வெளிப்படைத் தன்மைக்கான அனைத்துலக இயக்கத்தால் நடத்தப்படும் இந்த ஊழல் தடுப்பு மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றது. அந்த வரிசையில் அடுத்த வாரம் கோலாலம்பூரில் நடைபெறுகின்றது.

வழக்கமாக இந்த மாநாடுகளில் அந்த நாட்டின் பிரதமர்தான் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக நஜிப் இந்த ஊழல் தடுப்பு மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து ஒதுங்கிக்கொண்டுள்ளார்.