Home Featured கலையுலகம் சரத்குமார் அணியில் நால்வர், செயற்குழுவுக்கு வெற்றி! முழு வாக்கு விவரங்கள்!

சரத்குமார் அணியில் நால்வர், செயற்குழுவுக்கு வெற்றி! முழு வாக்கு விவரங்கள்!

793
0
SHARE
Ad

Cine Artistes - vishalசென்னை – நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியில் 20 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றுள்ளனர்.

அதே வேளையில், சரத்குமார் அணியிலிருந்து போட்டியிட்ட 4 வேட்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். ராம்கி, நளினி, நிரோஷா, டி.பி.கஜேந்திரன் ஆகியோரே அந்த நால்வராவர்.

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவர்களில் இருவர் தலைவர் தேர்தலில் தோல்வியுற்ற சரத்குமாரின் உறவினர்கள் என்பதாகும். நிரோஷா, சரத்குமாரின் மனைவி ராதிகாவின் தங்கையாவார். ராம்கி, நிரோஷாவின் கணவராவார்.

#TamilSchoolmychoice

சங்கத்தின் முக்கிய பதவிகள் அனைத்தையும் பாண்டவர் அணியான நாசர்-விஷால் குழுவினரே கைப்பற்றினர். அவர்களின் முழு வாக்கு விவரங்கள் பின்வருமாறு:-

தலைவர்

நாசர் – 1344

சரத்குமார்  – 1231

பொதுச் செயலாளர்

விஷால் – 1445

ராதா ரவி – 1138

பொருளாளர்

கார்த்தி – 1493

எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் – 1080

உதவித் தலைவர்கள் (இரண்டு பேர்)

கருணாஸ் – 1362 (வெற்றி)

பொன்வண்ணன் – 1235 (வெற்றி)

விஜயகுமார் – 1115

சிம்பு – 1107