Home One Line P2 தென்னிந்திய நடிகர் சங்கம்: தேர்தல் இரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது!

தென்னிந்திய நடிகர் சங்கம்: தேர்தல் இரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது!

987
0
SHARE
Ad

சென்னை: கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் நிறுத்தப்பட்டதுஇது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்நிலையில்அண்மையில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில்தேர்தலுக்கு தடை கோரியும்தேர்தலை இரத்து செய்ய கோரியும் மனுத்தாக்கல் செய்த ஏழுமலைபெஞ்சமீன் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததுஇதனையடுத்துவழக்கை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நடிகர் சங்கத்தால் நடத்தப்பட்ட இத்தேர்தல் செல்லாது என தமிழ்நாடு அரசு தரப்பு வாக்கறிஞர் வாதிட்டார்.

#TamilSchoolmychoice

விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23-ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும், பதவி காலம் முடிந்தாலும் புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிருவாகிகள் பதவியில் நீடிக்கலாம் என வாதிட்டார்.

நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தனர்.

நடிகர் சங்கம் கூறும்படி ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய, அந்த தேர்தலே செல்லாது என்று தெரிவித்தார். வழக்கு விசாரணை நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.