Home One Line P2 36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண விமான நிலையம் செயல்படத் தொடங்கியது!

36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண விமான நிலையம் செயல்படத் தொடங்கியது!

964
0
SHARE
Ad

யாழ்ப்பாணம்: 2.2 பில்லியன் ரூபாய் (51 மில்லியன் ரிங்கிட்) செலவில் மாற்றியமைக்கப்பட்ட பாலாலியில் உள்ள யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையம் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 17) இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 1983-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் காரணமாக இந்த விமான நிலையம் செயல்படாமலிருந்தது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது செயல்படத் தொடங்கியுள்ள, இந்த விமான நிலையம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை முதல்கட்டமாகத் தொடங்கியுள்ளது.

இன்று சென்னையிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தது.

#TamilSchoolmychoice

இலங்கையின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையம், யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 2.3 கி.மீ நீளமுள்ள ஓடுபாதை பொருத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய விமான நிலையங்களிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானச் சேவைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.