Home கலை உலகம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி ஒத்திவைப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி ஒத்திவைப்பு!

785
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற இருந்த வேளையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் விவகாரமாக நேற்று வியாழக்கிழமை பாண்டவர் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பேசிய நிலையில், அதற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதிபிரியன் மற்றும் 61 உறுப்பினர்களின் புகார் மனுவை விசாரித்த பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைக்க ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சங்கப் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், 44 தொழில்முறை உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், பதவிக்கால நீட்டிப்பு ஏப்ரலில் முடிந்த பின் தேர்தல் நடத்த நிருவாகிகள் எடுத்த முடிவையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், உறுப்பினர் பட்டியலை எந்த ஆண்டின் அடிப்படையில் வைத்து தேர்தலை நடத்தலாம் எனவும் ஆய்வு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வருகிற இந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் இரு தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதியான பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இத்தேர்தலை நடத்துகிறார். கூடிய விரையில் இத்தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.