Home Featured நாடு “உங்கள் அனைவருக்கும் வணக்கம்” – தனது உரையை தமிழில் துவங்கிய மோடி!

“உங்கள் அனைவருக்கும் வணக்கம்” – தனது உரையை தமிழில் துவங்கிய மோடி!

961
0
SHARE
Ad

modi 3கோலாலம்பூர் – இன்று மாலை ஸ்ரீகம்பாங்கானில் உள்ள மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் இந்திய வம்சாவளியினருடனான பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அரங்கிலிருந்த இந்தியர்களின் ஏகோபித்த கரகோஷத்துடன் எழுச்சி மிகு உரையாற்றினார்.

‘உங்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் தொடங்கிய மோடி அதன் பின்பு தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார்.

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு மிக முக்கியம் என்று மோடி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்தியா ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தன்னை முடக்கிக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிய மோடி, இந்தியா என்றால் உலகின் அனைத்து நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களைச் சொல்லலாம் என்று தெரிவித்தார்.

நட்பு என்பது முகத்தால் மலர்வது அல்ல; அது அகத்தில் இருந்து வருவது என்று திருவள்ளுவர் தனது திருக்குறள் வழி கூறியிருப்பதை அவ்வரங்கில் மோடி சுட்டிக் காட்டினார்.