Home Featured தமிழ் நாடு அடுத்த 72 மணி நேரமும் கன மழை தான் – என்னவாகுமோ சென்னை?

அடுத்த 72 மணி நேரமும் கன மழை தான் – என்னவாகுமோ சென்னை?

780
0
SHARE
Ad

chennaicycl1சென்னை – சென்னையில் நேற்று இரவு முதல் பெய்யத் தொடங்கிய கனமழை இன்னும் விட்ட பாடில்லை. ஏறக்குறைய நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ள நிலையில், அடுத்த 72 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் ரத்தோர் அளித்த பேட்டியில், “சென்னையில் இன்று மழையின் அளவு சற்று குறைந்துள்ள போதிலும், இன்னும் 3 தினங்களுக்கு கனமழை நீடிக்கும். சென்னையில் 1976-க்கு பிறகு தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது. ஏற்கனவே 50 சதவிதம் வரை பதிவாகியுள்ள நிலையில், இது 115 சதவீதம் வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.