Home Featured தமிழ் நாடு “கையில் சிவப்புப் பட்டை, மடாதிபதியுடன் ஆலோசனை” – தேர்தலுக்கு கருணா தயார்!

“கையில் சிவப்புப் பட்டை, மடாதிபதியுடன் ஆலோசனை” – தேர்தலுக்கு கருணா தயார்!

742
0
SHARE
Ad

karuna1சென்னை – ‘செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’ என்பது தொடர்பாக சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி, ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார். அப்போது வெளியான புகைப்படம் தொடர்பாகத்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாக உள்ளது.

கருணாநிதி-ஆளுநர் சந்திப்பிற்கான புகைப்படத்தில் என்ன? பரபரப்பு இருக்கப்போகிறது என்று விசாரித்தால், கடவுள் மறுப்புக் கொள்கைகளில் பெரியாரை பின்பற்றும் கருணாநிதி, தற்போது கையில் ஆந்திர மாநில தர்காவில் இருந்து மந்திரித்துக் கொண்டு வரப்பட்ட சிவப்பு கயிறை கட்டி இருக்கிறாராம். ஆளுனருடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தான் கட்டி இருக்கும் சிவப்பு கயிறு வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, சிவப்புப் பட்டை ஒன்றையும் அணிந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, திமுக வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் வரை, சிவப்பு வண்ணத்தை பயன்படுத்த வேண்டும் என வேலுாரில் உள்ள ஒரு மடாதிபதியும் கருணாவிற்கு ஆலோசனை கூறியுள்ளதாக பிரபல நாளிதழிலும் செய்திகள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இத்தகைய புதிய நம்பிக்கைகள் மூலம் கருணாநிதி, கடந்த சில நாட்களாக புதிய பலம் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் அடுத்தகட்ட பிரச்சாரங்களை தானே முன்னின்று நடத்த தயாராகி வருவதாகவும் திமுக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

அப்ப ஸ்டாலினின் முதல்வர் கனவு?