Home Featured நாடு அலோர் காஜாவில் வெள்ளம்: 355 பேர் மீட்பு!

அலோர் காஜாவில் வெள்ளம்: 355 பேர் மீட்பு!

568
0
SHARE
Ad

aloh gajah mapமலாக்கா – அலோர் காஜாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 91 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 8.40 மணியளவில் அந்தப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படத் தொடங்கியதையடுத்து அங்கிருந்த வீடுகளில் வசித்தவர்கள் அலோர் காஜா தற்காப்புப் படையினார் மீட்கப்பட்டதாக அதிகாரி முகமட் பைருல் காதிர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice