Home Featured கலையுலகம் சென்னை வந்துள்ள கோவை போலீஸ்: சிம்பு இன்று கைதாகலாம்!

சென்னை வந்துள்ள கோவை போலீஸ்: சிம்பு இன்று கைதாகலாம்!

544
0
SHARE
Ad

simbuகோவை – ‘பீப்’ பாடல் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, கோவை காவல்துறை நடிகர் சிம்புவிற்கு சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னதாக, பீப் பாடல் வெளியான போது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, கோவை மாதர் சங்கத்தினர், காவல்துறையில் புகார் அளித்து இருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் ஜாமீனில் வெளிவர முடியாதபடி காவல்துறை மூன்று பிரிவுகளில் சிம்பு மீது வழக்கு பதிவு செய்து உள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில்  இன்று கோவை காவல்துறையினர் சிம்பு மற்றும் அனிருத்தைக் கைது செய்ய சென்னை வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

அதன்படி, இன்று சிம்பு கைதாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

அனிருத் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக தகவல் அனுப்பியுள்ளார். அவர் நாடு திரும்பியவுடன் அவரையும் கைது செய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.