Home Featured நாடு பேராக் மாநில நூலகம் கின்னஸ் சாதனைக்குத் தயாராகிறது!

பேராக் மாநில நூலகம் கின்னஸ் சாதனைக்குத் தயாராகிறது!

1009
0
SHARE
Ad

Perak State Libraryஈப்போ- இன்னும் இரண்டு நாட்கள் தான் .. அதற்குள் 70,000 புத்தகங்களைக் கொண்டு புத்தகப் பிரமிடு ஒன்றை உருவாக்கிவிட்டால், பேராக் மாநில நூலகம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுவிடும்.

இந்திரா மூலியா அரங்கில் தற்போது வரை 40,000-த்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு பிரமிடு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது.

“திட்டம்: புத்தகப் பிரமிடு – கின்னஸ் உலக சாதனை” (Project: Book Pyramid – Guinness World Record) என்ற கருப்பொருளின் அடிப்படையில், இமாஜிகா செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் துணையுடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு, 63,377 கனமான அட்டைகள் மற்றும் பேப்பர் பைகளைக் கொண்டு லுக்சம்பர்க் புக் ஸ்டோர் செயின் என்ஸ்டர் உருவாக்கிய பிரமிடு தான் தற்போது அந்தச் சாதனையைத் தக்க வைத்துள்ளது.

இதனிடையே, பேராக் மாநில நூலகத்தின் இயக்குநர் சால்பியா மொகமட் கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமைக்குள் 70,000 புத்தகங்களைத் திரட்டிவிடுவோம் என்பதில் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 26-ம் தேதி, கின்னஸ் உலக சாதனையைச் சேர்ந்த பிரதிநிதிகள் வருகை புரிந்து பிரமிடைப் பார்வையிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குள் நூலகம் தனது திட்டத்தை நிறைவேற்றிவிட்டால், புதிய சாதனையாக பேராக் மாநில நூகலம் அறிவிக்கப்படும்.