Home Featured கலையுலகம் ‘பீப்’ பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பில்லை – சிம்பு தரப்பு விளக்கம்! 

‘பீப்’ பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பில்லை – சிம்பு தரப்பு விளக்கம்! 

678
0
SHARE
Ad

sivaசென்னை – சர்ச்சைக்குரிய ‘பீப்’ பாடலை, இணையத்தில் வெளியிட்டது, நடிகர் சிவகார்த்திகேயன் தான் என நேற்று நட்பு ஊடகங்களில் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. பிரபல நாளிதழ்களிலும் இது தொடர்பாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், இந்த விவகாரத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பில்லை என நடிகர் சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “பீப் பாடல் வெளியானதற்கும், சிவகார்த்திகேயனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை யாரோ வேண்டுமென்றே இந்த பிரச்னையில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். வதந்திகளை நம்பாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

strஎனினும், இந்த பதிவு நடிகர் சிம்புவின் பெயரில் வெளியிடப்படவில்லை. அவரின் டுவிட்டர் பக்கத்தை நிர்வகிப்பவர் (Admin) வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.