பத்து பகாட் – கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தின் சியங்மாய் நகரில் நடந்த பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 மலேசியர்களின் சடலங்கள் அடங்கிய சவப்பெட்டிகள், நேற்று தனிவிமானம் மூலம் ஜோகூர் கொண்டு வரப்பட்டு, பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இறந்தவர்கள் அனைவரும் பத்து பகாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப் பகுதி முழுவதும் சோகம் சூழ்ந்திருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மகிழ்ச்சியோடு சுற்றுலா சென்ற உறவினர்கள், சடலங்களாகத் திரும்பி வந்துள்ளதைக் கண்ட உறவினர்கள் சோகத்தில் கண்ணீர் சிந்திய காட்சி மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
படம்: நன்றி (The Star)
Comments