Home நாடு ‘ஜாசா’ தலைமை இயக்குநர் பதவியை இராஜினாமா செய்தார் சர்காஷி

‘ஜாசா’ தலைமை இயக்குநர் பதவியை இராஜினாமா செய்தார் சர்காஷி

888
0
SHARE
Ad
முகமட் புவாட் சர்காஷி

புத்ரா ஜெயா – அரசாங்கத்தின் பிரச்சார இலாகாவாகச் செயல்படும் ஜாசா (Jasa) எனப்படும் சிறப்பு விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநர் முகமட் புவாட் சர்காஷி இன்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) தனது பதவியை இராஜினாமா செய்திருக்கிறார்.

பத்து பகாட் நாடாளுமன்றத் தொகுதியின் அம்னோ வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாததைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

2013-இல் அவர் பத்து பகாட் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளராக அவர் தேர்வு பெறவில்லை. அதைத் தொடர்ந்து தனது ஜாசா பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு, பத்து பகாட் தொகுதியில் அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.