Home One Line P1 அன்வார்- சாஹிட் குரல் பதிவு ‘உயர் மட்ட சதி’

அன்வார்- சாஹிட் குரல் பதிவு ‘உயர் மட்ட சதி’

755
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு இடையில் சமீபத்தில் னடந்த பேச்சுவார்த்தையின் குரல் பதிவு என்று கூறி காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இது, “உயர் மட்ட சதி” என்று அம்னோ உச்சமன்றக்குழு உறுப்பினர் புவாட் சர்காஷி தெரிவித்துள்ளார்.

இப்பதிவின் விவரங்கள் மிகவும் தெளிவானவை மற்றும் உயர் தரமானவை.

#TamilSchoolmychoice

“நிச்சயமாக இந்த குரல் பதிவு பரவுவது அரசியல் ரீதியான உந்துதலைப் பெற்றுள்ளது. அவசரநிலையின் போது அரசியல் செய்வது குறைக்கப்படும் என்று கருதப்பட்டது, ஆனால் அது பெருகிய முறையில் பரவலாகத் தெரிகிறது. இது உயர் மட்ட சதிதானா?,” என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்த குரல் பதிவு தேசிய கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்த அம்னோ தலைவருக்கும், பிகேஆருக்கும் இடையிலான உரையாடல் என்றும், அம்னோ வட்டங்களில் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், அதன் நம்பகத்தன்மையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.