Home One Line P1 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மலேசியா பயன்படுத்தும்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மலேசியா பயன்படுத்தும்

435
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு மலேசியா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்தும்.

செவ்வாயன்று நடைபெற்ற கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் உத்தரவாத சிறப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

இந்த தடுப்பூசியின் எதிர்மறைகளை விட, அதிகமான நன்மைகள் உள்ளன என்பதை மருத்துவ தரவு காட்டுகிறது என்று டாக்டர் அடாம் விளக்கினார்.

#TamilSchoolmychoice

“இன்று (ஏப்ரல் 6) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு கூட்டத்தை நடத்தியது. நாங்கள் விவாதித்த விஷயங்களில் இங்கிலாந்தில் இருந்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

“மலேசியா அஸ்ட்ராஜெனெகாவை தொடர்ந்து பயன்படுத்துவோம். ஏனென்றால், இந்த தடுப்பூசியில் எதிர்மறைகளை விட அதிகமான நன்மைகள் இருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன,” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் மரணங்கள் ஏற்படுவதால் உலகின் சில நாடுகள் அதனை பயன்படுத்துவதிலிருந்து பின்வாங்கிக் கொண்டன.