Home Featured இந்தியா இனி இளம் குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை – முக்கிய மசோதா நிறைவேற்றம்!

இனி இளம் குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை – முக்கிய மசோதா நிறைவேற்றம்!

776
0
SHARE
Ad

rajya-sabhaபுது டெல்லி – நிர்பயா வழக்கில் தவறு செய்த இளம் குற்றவாளி, மூன்றாண்டுகள் மட்டும் சிறார் இல்லத்தில் தண்டனை பெற்று விடுதலையானது, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான சட்ட திருத்தம் வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கருத்து தெரிவித்த நிலையில், நேற்று மாநிலங்கவையில் சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறி உள்ளது.

இதன்மூலம், கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 – 18 வயதுக்கு உட்பட்டவர்கள், பிற குற்றவாளிகளைப் போலவே, விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர்.

சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

#TamilSchoolmychoice

சிறார் குற்ற வயது வரம்பு, தற்போது உள்ள 18 வயதிலிருந்து, 16 வயதாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்களைப் பிற குற்றவாளிகளைப் போல் விசாரித்து, கடும் தண்டனை வழங்கலாம்.

குறிப்பாக, கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் 16 – 18 வயதிற்குட்பட்டோர், பிற குற்றவாளிகளைப் போலவே விசாரிக்கப்படுவர்.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், சிறிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களையும், பிற குற்றவாளிகளைப் போல விசாரித்து, 3-7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம். கொடிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும்.