Home Featured உலகம் சீனா நிலச்சரிவு: 60 மணி நேரத்திற்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்பு!

சீனா நிலச்சரிவு: 60 மணி நேரத்திற்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்பு!

752
0
SHARE
Ad

Rescuers search for potential survivors near a damaged buildings following a landslide at an industrial park in Shenzhen, in south China's Guangdong province, Tuesday, Dec. 22, 2015. Authorities blamed an enormous, man-made mountain of soil and waste for the collapse of nearly three dozen buildings in southern China's most prominent manufacturing city. (AP Photo/Andy Wong)

பெய்ஜிங் – சீனாவில் ஷென்சென் நகரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலரில், 60 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், இடிந்த கட்டிடத்தின் நடுவில் கால்கள் சிதைந்த நிலையில், ஆடவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

மீட்கப்பட்ட அவர், தனக்கு அருகே மற்றொருவரும் உயிருடன் உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவ்விடத்தில் மேலும் தீவிர தேடுதல் பணியை அவர்கள் மேற்கொண்ட போது, மீட்புப் படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

இதனிடையே, 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. தற்போது அவர்களைத் தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.