Home Featured நாடு ஸ்டீவ் ஹார்வே மீது 5 மில்லியன் டாலர் வழக்கு – மிஸ் கொலம்பியா திட்டம்!

ஸ்டீவ் ஹார்வே மீது 5 மில்லியன் டாலர் வழக்கு – மிஸ் கொலம்பியா திட்டம்!

854
0
SHARE
Ad

Miss universe 2015போகோடா – ஸ்டீவ் ஹார்வேயின் தவறாக அறிவிப்பால், தங்கள் நாட்டு அழகிக்கு மகுடம் சூட்டப்பட்டாலும், “அது சரியான முடிவு தான்.. பட்டத்தை அவரிடமிருந்து பறிக்க முடியாது” என்று கூறி கொலம்பியாவைச் சேர்ந்த சட்ட நிறுவனம் ஒன்று வழக்குத் தொடுத்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த டபிள்யூஜிஎன்ஓ.காம் (WGNO) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2015 போட்டியின் இறுதிச் சுற்றில், முடிவை அறிவிக்க வந்த அறிவிப்பாளர் ஸ்டீவ் ஹார்வே, அட்டையில் இரண்டாம் நிலையில் இருந்த மிஸ் கொலம்பியா அரியட்னா கூடிரர்சை தான் ‘உலக அழகி 2015’ என தவறுதலாக அறிவித்துவிட்டார்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் தனது தவறை உணர்ந்த அவர், அரங்கில் மன்னிப்புக் கேட்டு, மிஸ் பிலிப்பைன்ஸ் பியா அலோன்சோ வோட்ர்ஸ்பேக் தான் உண்மையான ‘உலக அழகி 2015’ என்று மாற்றி அறிவிப்பு செய்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவரது தவறுக்கு எதிராக உலகளவில் கடும் விமர்சனங்களும், கேலிகளும் எழுந்துள்ளன.

இதனிடையே, ஸ்டீவ் ஹார்வே மீது கொலம்பியா அழகி அரியட்னா, 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அவர் செய்த தவறான அறிவிப்பு தனது வாழ்க்கையையே வேறு மாதிரி மாற்றிவிட்டதாகவும், தான் மிகவும் உடைந்து போயுள்ளதாகவும் அரியட்னா தெரிவித்துள்ளதாக அச்செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

அதற்குப் பதிலளித்துள்ள ஸ்டீவ் ஹார்வே, “அது ஒரு மிக மோசமான மனிதத் தவறு. அதற்காக நான் மிகவும் வருத்தமடைகின்றேன். மனிதர்கள் நாம் தவறு செய்வது இயல்பு தான். எனவே அவர் (அரியட்னா) அதைக் கடந்து வர வேண்டும். எனக்கு எதிராக வழக்குத் தொடுக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அதை அவர் செய்யமாட்டார் என நம்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.