Home Featured உலகம் ஜாகர்த்தா வெடிகுண்டு தாக்குதல்: மலேசியர்கள், சிங்கப்பூரர்கள் யாரும் இதுவரை பாதிப்பில்லை!

ஜாகர்த்தா வெடிகுண்டு தாக்குதல்: மலேசியர்கள், சிங்கப்பூரர்கள் யாரும் இதுவரை பாதிப்பில்லை!

924
0
SHARE
Ad

At least three dead in Jakarta attackஜாகர்த்தா – இன்று வியாழக்கிழமை காலை இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் ஒரு பேரங்காடிக்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில், இந்தத் தாக்குதலில் மலேசியர்களோ, சிங்கப்பூரியர்களோ இதுவரை யாருக்கும் பாதிப்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு ஒலிகள் கேட்டன. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எனக் கருதப்படுபவர்களை நோக்கி இந்தோனேசிய காவல் துறையினர் சுட்டதில் இதுவரை நான்கு தீவிரவாதிகள் மாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

At least four dead in Jakarta attackஇதனைத் தொடர்ந்து மரணமடைந்தவர்கள் அத்தனை பேரும் தீவிரவாதிகளா அல்லது பொதுமக்களும் அடங்குவார்களா என்பது சரியாகத் தெரிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

ஸ்டார் பக்ஸ் எனப்படும் அமெரிக்க காப்பி தொடர் உணவகங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால்,  தாக்குதலைத் தொடர்ந்து, ஜாகர்த்தாவில் உள்ள அனைத்து ஸ்டார் பக்ஸ் உணவகங்களும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.