Home உலகம் ஜாகர்த்தா காற்பந்து அரங்க பேரிடர் : 32 சிறுவர் சிறுமியரும் மரணம்

ஜாகர்த்தா காற்பந்து அரங்க பேரிடர் : 32 சிறுவர் சிறுமியரும் மரணம்

544
0
SHARE
Ad

ஜாகர்த்தா : இந்தோனிசியாவில் நிகழ்ந்த மிக மோசமான காற்பந்து திடல் பேரிடரில் மரணமடைந்த 174-க்கும் மேற்பட்டவர்களில் 32 சிறுவர்-சிறுமியரும் அடங்குவர் என்ற சோகச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தோனிசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் என்ற நகரில் சனிக்கிழமை அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற காற்பந்து போட்டி ஒன்றுக்குப் பின்னர் இரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல்களினாலும், அதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் மேற்கொண்ட கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்களினாலும் இதுவரையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் 174 ஆக உயர்ந்துள்ளது.

காற்பந்து வரலாற்றில் உலக அளவில் மிக மோசமான காற்பந்து விளையாட்டுப் பேரிடராக இது கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

காற்பந்து போட்டியில் ஒரு குழு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இரசிகர்கள் திடலில் இறங்கி மோதல்களில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். இதனால் ஏற்பட்ட அமளியினால் பலர் காயமடைந்தனர்.