Home நாடு ரபிசி ரம்லி : “அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்”

ரபிசி ரம்லி : “அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்”

503
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி ஆரூடம் கூறியுள்ளார். அம்னோ தலைவர்கள் இன்று கோலாலம்பூரில் கூடி சந்திப்பு நடத்தியதும் பொதுத் தேர்தலுக்கான ஆரூடங்களை வலுப் பெறச் செய்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 7-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு அந்த வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கக் கூடும் என்றும் அதன் மூலம் நாட்டில் மீண்டும் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்படலாம் என்றும் ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்கு முன்பாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மாமன்னரைச் சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை முன்வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.