கோலாலம்பூர் – வெளிநாட்டினர் வேண்டாம் என்று சொல்லும் மலேசிய இளைஞர்கள், அழுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்துள்ளார்.
நேற்று ஷா ஆலமில் சிலாங்கூர் இளைஞர் சபையின் 32-வது ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய சாஹிட், “நான் இளைஞர்களுக்கு சவால் விடுகிறேன். என்னென்ன வேலைகளில் எல்லாம் வெளிநாட்டினர்கள் அமர்த்தப்பட்டுள்ளனரோ அதை செய்யுங்கள். நாம் அவர்களின் வேலைகளை ஏற்றுக் கொண்டு வெளியே தள்ளுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களைக் கொண்டு வர மலேசிய அரசாங்கம், வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.