Home Featured நாடு அடுத்தது என்ன? – நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மொகிதின்!

அடுத்தது என்ன? – நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மொகிதின்!

797
0
SHARE
Ad

muhyiddin_2சிப்பாங் – அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட டான்ஸ்ரீ மொகிதின் யாசின், தனது அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை நாளைக்குள் முடிவு செய்து அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாளை செய்தியாளர்களைச் சந்தித்து தனது இடைநீக்கம் குறித்தும், மற்ற விவகாரங்கள் குறித்து மொகிதின் விளக்கமளிக்கவுள்ளார்.

“அதுவரையில், நான் அம்னோவில் இருப்பேன் மற்றும் எனக்கு ஆதரவு வழங்கிய நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நேற்று மாலையில் வியட்நாமில் இருந்து நாடு திரும்பிய மொகிதின் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த மொகிதின், நேற்று மாலை தான் வியட்நாம் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு, மொகிதினுக்கு கோஷங்களுடன் வரவேற்பு அளித்தனர்.