Home Featured உலகம் மெக்சிகோவில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 121 பேருக்கு ‘ஜிக்கா’ வைரஸ்!

மெக்சிகோவில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 121 பேருக்கு ‘ஜிக்கா’ வைரஸ்!

434
0
SHARE
Ad

zika-virus74-600மெக்சிகோ – மெக்சிகோவில் 11 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 121 பேருக்கு ஜிக்கா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பிரேசிலில் 580 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக கொலம்பியாவில் 2,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்பட சுமார் 25,000 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு உள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிலும் ஜிக்கா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தொற்று பரவாத வகையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மெக்சிகோவில் 121 பேருக்கு ஜிக்கா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் 11 பேர் கர்ப்பிணி பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.