Home Featured நாடு மலேசியாவில் ஜிக்கா வைரஸ் தாக்கிய 2-வது நபர் இதய நோயால் மரணம்!

மலேசியாவில் ஜிக்கா வைரஸ் தாக்கிய 2-வது நபர் இதய நோயால் மரணம்!

741
0
SHARE
Ad

zika virusகோலாலம்பூர் – சபா மாநிலத்தில் லிகாஸ் என்ற பகுதியில் வசிக்கும் 61 வயதான நபர் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மலேசியாவில் ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இரண்டாவது நபர் அவர் ஆவர். அதேவேளையில், உள்நாட்டிலேயே ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் முதல் நபரும் அவர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்நபர் இன்று சனிக்கிழமை மதியம் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது இறப்பிற்குக் காரணம் ஜிக்கா வைரஸ் தாக்குதல் தான் எனத் தகவல்கள் கசிந்த நிலையில், சுகாதார அமைச்சு அது குறித்து விளக்கமளித்துள்ளது.

#TamilSchoolmychoice

சுகாதார அமைச்சின் பொது இயக்குநர் டத்தோ நூர் ஹிசாம் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நபர் மரணமடைந்ததற்கான காரணம் இதயம் நோய் தான் என்றும், ஜிக்கா வைரஸ் பாதிப்பால் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.