Home Featured நாடு சிலாங்கூர் சுல்தான் 3-வது திருமணம் – தொலைக்காட்சிப் பிரபலத்தை மணந்தார்!

சிலாங்கூர் சுல்தான் 3-வது திருமணம் – தொலைக்காட்சிப் பிரபலத்தை மணந்தார்!

904
0
SHARE
Ad

Sultan

கோலாலம்பூர் – சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, தொலைக்காட்சிப் பிரபலமான நோராஷிகின் அப்துல் ரஹ்மானை 3 -வது திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, கிள்ளான் இஸ்தானா ஆலம் ஷாவிலுள்ள, மஸ்ஜித் இஸ்தானா டிராஜாவில், சிலாங்கூர் முஃப்தி டத்தோ மொகமட் தாம்யெஸ் அப்துல் வாஹித் முன்னிலையில், அவர்களின் திருமணம் நடைபெற்றதாக சுல்தானின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ மொகமட் முனிர் பானி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரைச் சேர்ந்த 45 வயதான நோராஷிகின், கடந்த 2005-ம் ஆண்டு, சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான, ஸ்ரீ அங்காசா விருது பெற்றவர்.

முன்னாள் மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளருமான நோராஷிகின், எத்திஹாட் ஏர்லைன்ஸ் விமானி முஸ்தபா கமல் ஹாரிமை என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். நோராஷிகினுக்கு நூர் அமன்டா (வயது 17), ஆடம் சாலே (வயது 14) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சிலாங்கூர் சுல்தானுக்கு இது மூன்றாவது திருமணம். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவரான சுல்தானுக்கு, முன்னாள் மனைவி ராஜா ஜாரினா ராஜா டான்ஸ்ரீ சைனல் மூலமாக இரு மகள்களும், புவான் நூர் லிசா அப்துல்லா மூலமாக ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.