Home Featured நாடு லங்காவி கழுகுச் சிலை ‘ஹராம்’ – அகற்றும் முயற்சியில் ஒரு தரப்பு!

லங்காவி கழுகுச் சிலை ‘ஹராம்’ – அகற்றும் முயற்சியில் ஒரு தரப்பு!

979
0
SHARE
Ad

kedah-langkawi-eagle-square_1கோலாலம்பூர் – லங்காவியின் அடையாளமாகக் கருதப்படும் புகழ்பெற்ற கழுகுச் சிலையை, ஹராம் என்று கூறி ஒரு தரப்பினர் அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து ‘பெரித்தா ஹரியான்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அது போன்ற சிலைகள் ஹராம், அது இடிக்கப்பட வேண்டும் என்று பேராக் மாநிலத்தின் துணை மஃப்தி (Perak deputy mufti) ஜாம்ரிரி ஹாசிம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அது குறித்து கெடா மாநில துணை மஃப்தி ஷேக் மார்வாசி சியாவுடின் கூறுகையில், அது போன்ற கோரிக்கைகள் எதுவும் வந்துள்ளதா என ஃபாட்வா கவுன்சிலிடம் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இப்போதைக்கு இந்த விவகாரத்தை கவனிக்கமாட்டோம். ஆனால் ஒருவேளை அப்படி ஏதும் கோரிக்கைகள் வந்தால், பின்னர் அதிகாரப்பூர்வமாகக் கலந்தாலோசிப்போம்”

“தற்போது, (கெடா) மஃப்தி இது குறித்து எதுவும் சொல்லவில்லை. இது ஒரு பழைய விவகாரம். ஃபாட்வா கவுன்சிலிடம் இது குறித்து கலந்தாலோசிப்போம். அதோடு உள்ளூர் கவுன்சிலிடமும் ஆலோசனைகள் கேட்போம்” என்று மார்வாசி மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், கடந்த 1996-ம் ஆண்டு அச்சிலை அமைக்கப்பட்டபோது கெடா இஸ்லாமிய அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கவில்லை என்றும் மார்வாசி தெரிவித்துள்ளார்.

“இஸ்லாமிய சட்டப்படி அது உண்மை தான், அது ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் அது ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது”

“இப்போது, அதை அகற்ற வேண்டுமென்றால், பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். அதோடு அதை பொதுமக்களிடமும் சொல்ல முடியாது காரணம் அக்கதை பின்னர் வேறு மாதிரியாகத் திரிக்கப்பட்டுவிடும்” என்றும் மார்வாசி கூறியுள்ளார்.