Home Featured நாடு சர்ச்சைக்குரிய இல்லத்தை பத்திரிக்கையாளர்களுக்கு சுற்றிக் காட்டிய லிம் குவான் எங்!

சர்ச்சைக்குரிய இல்லத்தை பத்திரிக்கையாளர்களுக்கு சுற்றிக் காட்டிய லிம் குவான் எங்!

1039
0
SHARE
Ad

Bagan MP Lim Guan Engஜோர்ஜ் டவுன் – சொந்தமாகத் தான் வாங்கிய பங்களாவின் விலை, சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, பினாங்கு முதல்வர் லில் குவான் எங், இன்று பத்திரிக்கையாளர்களுக்கு தனது இல்லத்தைச் சுற்றிக் காட்டினார்.

சுமார் 30 பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் உள்ளிட்ட குழுவினர் லிம் குவான் எங்குடன் இணைந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். பத்திரிக்கையாளர்கள் வீட்டின் வாயிலில் வீடியோ எடுக்க அனுமதித்த லிம் குவான் எங், வீட்டினுள் புகைப்படங்கள் எடுக்க மட்டுமே அனுமதித்தார் என ஸ்டார் இணைய செய்தித் தளம் தெரிவித்திருக்கின்றது.

10,000 சதுர அடி நிலத்தில் அமைந்திருக்கும் அந்த இரண்டு மாடி பங்களா, எண்: 25, ஜாலான் பின்ஹோர்ன், (கிரீன் லேன் வழி) ஜோர்ஜ் டவுன் என்ற முகவரியில் அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

எனது இல்லம் ஷா ஆலாமில் உள்ள கிர் தோயோ மாளிகை போல பிரம்மாண்டமானதோ, ஆடம்பரமானதோ அல்ல என்றும் சாடிய லிம் குவான் எங், ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் காவல் துறையினரின் விசாரணைக்கு தாம் தயார் தயார் என்றும் கூறியுள்ளார்.