கோலாலம்பூர் – அரசாங்க இரகசியங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லி, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தானாகவே முதுகிற்குப் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் பரிதாபத்தை உருவாக்கியதாக எழுந்த சர்ச்சைக்கு அவரது வழக்கறிஞர் சைபுல் இசாம் ரம்பி விளக்கமளித்துள்ளார்.
வழக்கமாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் ஒருவர், கிரிமினல் குற்றமாக இல்லாத பட்சத்தில், கையைப் பின்னால் கட்டிக் கொள்ளுமாறு காவல்துறையால் கூறப்படுவது வழக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“பரிதாபத்தை உருவாக்க அவர் அவ்வாறு செய்யவில்லை, காவல்துறையின் வழக்கமான முறைப் படி தான் அவ்வாறு நடந்துகொண்டார்” என்று சைபுல் இசாம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் இன்றோ, நாளையோ ரபிசி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.