Home Featured தமிழ் நாடு மயிலாப்பூரில் தொகுதியில் போட்டியிடுகிறார் குஷ்பு!

மயிலாப்பூரில் தொகுதியில் போட்டியிடுகிறார் குஷ்பு!

593
0
SHARE
Ad

kushboo341-600சென்னை – திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.

வேட்பாளர்களை அறிவித்து விரைவில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கான பணிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இறங்கியுள்ளன. எனவே காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறியில் இருந்துவிடக்கூடாது என்பதில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உறுதியாக உள்ளார்.

இதனால் மேலிட தலைவர்களின் ஆலோசனை படி 41 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். குறிப்பிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதன்படி திருத்தணி- கிருஷ்ணசாமி, அம்பத்தூர்-ஹசன் ஆரூண், ராயபுரம்- ராயபுரம் மனோ, மயிலாப்பூர் -குஷ்பு, பெரும்புதூர்- செல்வப்பெருந்தகை, மதுரவாயல்- அருள் அன்பரசு, ஆத்தூர்(தனி)-அர்த்தனாரி,

உதகமண்டலம்-கோபால், திருச்சி கிழக்கு-ஜெரோம் ஆரோக்கியராஜ், ஜெயங்கொண்டம்-ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில்- மணிரத்தினம், பட்டுக்கோட்டை-மகேந்திரன், நாங்குநேரி-வசந்தகுமார்,

குளச்சல்-ராபர்ட் புரூஸ், விளவங்கோடு-விஜயதரணி, கிள்ளியூர்-பிரின்ஸ் ஆகிய பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் மயிலாப்பூர் தொகுதியை தங்கபாலு கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் குஷ்புவுக்கும், தங்கபாலுவுக்கு இடையே மயிலாப்பூர் தொகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.